கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி,: பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் மூர்த்தி , பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் தினகரன்,மாவட்ட இணை செயலாளர் கோடீஸ்வரன் சிறப்புரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.