மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
17-Oct-2026
ராமநத்தம்: ராமநத்தம் அருகே பி.டி.ஓ.,வை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநத்தம் அடுத்த அரங்கூர் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மங்களூர் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், இன்று காலை 10:30 மணியளவில் அரங்கூர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், திட்டப் பணிகளை நிறைவேற்றி கோரியும், மங்களூர் பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ.,வை கண்டித்து கோஷமிட்டு கலைந்து சென்றனர்.
17-Oct-2026