உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரியை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

அதிகாரியை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : முதனை செம்பைய்யனார் கோவில் அதிகாரியை கண்டித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில், பழமையான செம்பைய்யனார் கோவில் உள்ளது. அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவிலில் கழிவறை வசதிகள் இல்லாமல் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். துாய்மை காவலர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும், முறையாக கிராம மக்களுக்கு தெரிவிக்காமல், கடந்தாண்டு ஆடு, கோழிகளை குறைந்த விலைக்கு ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஹிந்து அறநிலையத் துறை அதிகாரியை கண்டித்தும், பாலக்கரையில் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆசைத்தம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தமிழரசன், கிராம முக்கியஸ்தர்கள் தங்கராசு, ஜெயபாலன், சக்கரவர்த்தி, முருகையன், சிற்றரசு, ராமலிங்கம், இளங்கோவன், செல்வராசு, பெருமாள், ஜோதி முன்னிலை வகித்தனர். பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் ஜோதிகாந்த் கண்டன உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை