உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடந்தது. சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது தொடர்பான முகாம், நேற்று குறிஞ்சிப்பாடியில் நடந்தது. தனித்துணை கலெக்டர் தனலட்சுமி தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்களிடம், நிலை அலுவலர்களுக்கு உதவுவது, சரியான வாக்காளர் பட்டியலை தயார் செய்வது உள்ளிட்ட, தீவிர சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. முகவர்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும், சந்தேகங்களுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ