உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்:கடலுாரில் ஜன., 25 வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கடலுார் டவுன் ஹால் எதிரில் நடந்த ஊர்வலத்தை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை வழியாக மஞ்சக்குப்பம் செயின்ட் கல்லுாரி வரை, கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு நுாறு சதவீதம் வாக்குப்பதிவு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆர்.டி.ஓ., அபிநயா, தேர்தல் தாசில்தார் சுரேஷ்குமார், தேர்தல் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி