உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்

விருதை நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் பெரியார் நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில், 20வது வார்டு மகிழம்பூ தெருவில் வார்டு கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் நேதாஜி வரவேற்றார். கூட்டத்தில், குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகள் தன்னிறைவு, தேவைகள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும், தெருவில் சுற்றித்திரியும் நாய், குரங்கு, பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை