உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோமுகியில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு எச்சரிக்கை

கோமுகியில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு எச்சரிக்கை

வேப்பூர்: கோமுகி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், வேப்பூர் பகுதி கரையோர கிராம மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று பகல் 11:00 மணியளவில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வேப்பூர் பகுதியில் பெய்த தொடர் மழை, நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், கோமுகி அணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்டம், வேப்பூரிலுள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் உத்தரவின்படி, ஆற்றின் கரையோர கிராம மக்கள், ஆறுகளுக்கு செல்ல வேண்டாம்.மேலும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், மேடான பகுதியில் தங்க வேண்டுமென, வருவாய் அலுவலர்கள் கிராமங்கள் தோறும் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை