உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து நெரிசலை தடுக்க கடலுாரில் கண்காணிப்பு கோபுரம்

போக்குவரத்து நெரிசலை தடுக்க கடலுாரில் கண்காணிப்பு கோபுரம்

கடலுார்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடலுார் லாரன்ஸ் ரோட்டில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி, கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் அந்தந்த உட்கோட்ட போலீசார், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென, எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடலுார் உட்கோட்டத்திற்குப்பட்ட கடலுார் நாகம்மன் கோவில் அருகில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை