உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் குழாய் சீரமைப்பு

குடிநீர் குழாய் சீரமைப்பு

நெல்லிக்குப்பம்; திருக்கண்டேஸ்வரத்தில் உடைந்த குடிநீர் பைப், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளி அருகே நகராட்சியின் குடிநீர் குழாயில் 10 நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் குடிநீருக்கு சிரமபடுவதாக கவுன்சிலர் செல்வகுமார், நகராட்சி அதகிாரிகளிடம் புகார் தெரிவித்தார்.இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அ வதியடைந்தனர். இதனை சுட்டிக் காட்டி 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில், உடைந்த குடிநீர் பைப் நேற்று சீரமைக்கப்பட்டது. இதனால், மக்கள் நிம்மதியடைந்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை