உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

புதுச்சத்திரம்: சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையை சேர்ந்தவர் சடையன் மகன் நிலவினோதன், 48; கூலித்தொழிலாளி. இவருக்கும் இவருடைய அண்ணன் மாயகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இவர்களுக்குள் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாயகிருஷ்ணன், மனைவி இந்திரா சேர்ந்து நிலவினோதன் மனைவி சித்ராவை தாக்கினர்.புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, மாயகிருஷ்ணன், இந்திரா இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ