உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நெய்வேலி: நெய்வேலியில் முதல்வரின் முகவரித்துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும்,மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது. நெய்வேலி மக்களின் நலன் கருதியும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும், கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையிலும், சிறப்பு முகாம் திட்டமிடப்பட்டது. இதையொட்டி, கட லுார் மாவட்டம், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் முகவரித்துறை சார்பில், சிறப்பு மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் , சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், தாசில்தார் விஜய் ஆனந்த், பி.டி.ஓ., மீரா கோமதி, நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் குருநாதன், ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைமைபொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, என்.எல்.சி., தொ.மு.ச., தலைவர் ஞானஒளி, பொருளாளர் அப்துல் மஜீத் , அலுவலக செயலாளர் சீ னிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை