உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி

டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு தமிழ் புத்தாண்டையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கினார். ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமார், ரயில்வே இருப்பு பாதை இன்ஸ்பெக்டர்அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வழங்கினர். பேராசிரியர் லதா வாகனப் புகையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் பேசினார். விழாவில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் செந்தில்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கார்த்திக்ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ