உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அறிவுறுத்தல்

 நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அறிவுறுத்தல்

சிறுபாக்கம்: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்க அமைச்சர் கணேசன் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா வரும் நாளை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள நகர, பேரூர், ஒன்றிய, வார்டு, கிளைகள் தோறும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். அதில், கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, மாவட்ட நிர்வாகி கள், முன்னாள், இன்னாள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அ னைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ