உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

கடலுார் : கடலுார் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி அதிகளவு மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் அருள்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜவேணி 24; அருள்குமார் கேரளாவிற்கு சுற்றுலா செல்வதற்காக நண்பர்களிடம் பணம் கடன் வாங்கி வைத்திருந்தார். இதையறிந்த ராஜவேணி தனது கணவரை சுற்றுலாவிற்கு செல்லக் கூடாது எனக் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜவேணி கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்த மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு மயங்கினார்.உடன், குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ