மேலும் செய்திகள்
பாட்டிலால் தாக்கியவர் கைது
29-Jul-2025
முதியவர் மீது போக்சோ வழக்கு
08-Aug-2025
விருத்தாசலம்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். மங்கலம்பேட்டை அடுத்த சந்தனக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வமணி மனைவி பூங்காயி, 35. இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 14, 13 வயதில் மகள், மகன் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் ஊருக்கு திரும்பிய செல்வமணி, கடந்த 24ம் தேதி தான் அனுப்பிய பணம் குறித்து கணக்கு கேட்டுள்ளார். இதில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டேரியை சேர்ந்த நபரிடம் நீண்டநேரம் பேசியதையும் கண்டித்துள்ளார். அன்று மாலை 6:00 மணியளவில் இருந்து பூங்காயி வீட்டை விட்டு மாயமானார். செல்வமணி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
29-Jul-2025
08-Aug-2025