கணவரின் உடலை மீட்க மனைவி மனு
கடலுார் : சிதம்பரம் அடுத்த தாண்டவராயன் சோழகன் பேட்டையைச் சேர்ந்த தமிழச்சி. இவர் சவுதியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுதரக்கோரி நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனு விபரம்: எனது கணவர் ரமேஷ் கடந்த 12ம் தேதி சவுதியில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இறந்த அவரது உடலை மீட்டுத்தர வேண்டும். மேலும், குழந்தைகளை காப்பாற்ற முதல்வர் நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.