உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

பரங்கிப்பேட்டை: குடும்ப பிரச்னை காரணமாக, ஹோட்டல் கடை ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையபெருமாள், 42;சிதம்பரத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இளையபெருமாள் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை, மனைவி ரஞ்சிதா கண்டித்ததால், மனமுடைந்த இளையபெருமாள் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !