மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை சேதம்
17-Mar-2025
விருத்தாசலம்: தொட்டிக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்திற்கு வந்து , தொட்டிக்குப்பம், ராசாபாளையம், ராகவன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி கல்லுாரிகளுக்கும் தினசரி பஸ் ஏறிச் செல்கின்றனர்.இந்த பஸ் நிறுத்ததில் பயணியர் நிழற்குடை இல்லாததால், கிராம மக்கள், மாணவர்கள் வெயில், மழை யில் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, கிராம மக்கள், மாணவர்கள் நலன் கருதி, பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-Mar-2025