உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுபாக்கத்தில் வாரச்சந்தை அமைக்கப்படுமா?

சிறுபாக்கத்தில் வாரச்சந்தை அமைக்கப்படுமா?

சிறுபாக்கம்: சிறுபாக்கம் ஊராட்சியில் வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறுபாக்கம் ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சார்ப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, எஸ்.பி.ஐ., வங்கி உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் பெரிய வணிக வளாகங்கள், காய்கறி விற்பனை நிலையங்கள் இல்லாததால், அருகிலுள்ள நகரங்களுக்கு அலைகின்றனர்.எனவே, சிறுபாக்கம் ஊராட்சியில் வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ