அரசு பள்ளிகளில் விளையாட்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்படுமா
கடலுார் ; கடலுார் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் ஆண்டு தோறும், பள்ளி ஆண்டுவிழாவை போல விளையாட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.ஆனால், அரசுப்பள்ளிகளில் விளையாட்டுவிழா என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அரசுப்பள்ளிகளில் விளையாட்டு விழா நடத்த வேண்டுமெனில், போட்டிகளை நடத்த விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கும்,மாணவர்களுக்கு சான்றிதழ் அச்சடிப்பதற்குமாவது நிதி வேண்டும்.தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய துணைமுதல்வர் உதயநிதி பொறுப்பேற்ற பின் பல்வேறு சீரமைப்புப்பணிகள் நடக்கிறது. அரசுப்பள்ளிகளில் ஆண்டுதோறும் விளையாட்டு விழா நடத்த நிதி ஒதுக்கி, விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.