பராமரிப்பின்றி ஏசி நிழற்குடை ரூ. 10 லட்சம் வீணடிப்பு
விருத்தாசலம் பெரியார் நகரில் பயணிகள் நலன் கருதி, கடந்த 2014 -15ம் ஆண்டு, எம்.பி., நிதி ரூ.10 லட்சம் செலவில், ஏசி பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. 2016ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த ஏசி பயணியர் நிழற்குடை, பராமரிப்பின்றி பழுதடைந்தது. அதுமுதல் 8 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளது. இந்நிலையில், நிழற்குடையின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்துள்ளது. மேலும், பயணியர் அமரும் இருக்கைகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், பயணிகள் அமர முடியாத அவலம் உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி, பழுதடைந்த ஏசி பயணியர் நிழற்குடையை சீரமைத்து, மீண்டும் பயணிகள் பயன்பாடிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.