உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.விருத்தாசலம் மேலகோட்டை வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ பாண்டி,25; இவரது மனைவி பரணி,22; . இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், 3 வயதில் ஆண்; 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த பரணி அன்றிரவு மணலுார் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில், திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார், சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.மேலும், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால், வரதட்சணை கொடுமையால் பரணி இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை