உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புடவையில் தீப்பிடித்து பெண் பலி

 புடவையில் தீப்பிடித்து பெண் பலி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை, நாடார் தெருவை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மனைவி உஷா, 49; இவர் கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டில் மின்சாரம் நின்று விட்டதால், மண்ணெண்ணெய் விளக்கைஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக புடவையில் தீப்பிடித்து எரிந்ததால் உஷா அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், உஷாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உஷா இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ