உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உறவினர் குழந்தையுடன் பெண் மாயம்

உறவினர் குழந்தையுடன் பெண் மாயம்

வடலுார் : திருக்கோவிலுார் அடுத்த மே.மாலுார் பகுதியை சேர்ந்தவர் சிமியோன். இவர், தனது மனைவி ஏஞ்சலா ஜெலஸ்டின் மேரி, 28; என்பவருடன் வடலுார் அடுத்த ராஜாக்குப்பம் கிராமத்தில் தங்கி, கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஆஞ்சலா ஜெலஸ்டின் கேரி, தனது கணவரின் அண்ணன் மகள் ஜெனிசியா, 3; என்பவருடன் வடலுார் செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிமியோன் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை