உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணிடம் நகை திருட்டு

 பெண்ணிடம் நகை திருட்டு

கடலுார்: திருமணத்திற்கு வந்த சென்னை பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்து மூன்றரை நவரன் நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அயனாவரம், ரங்கப்பா தெருவைச் சேர்ந்தவர் குணசீலன் மனைவி ராஜீவி, 28; இவர் நேற்று முன்தினம் கடலுார் திருவந்திபுரத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமணம் முடிந்து மீண்டும் சென்னை செல்ல கோவிலில் இருந்து கடலுார் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது தான் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை சரிபார்த்தபோது, அதிலிருந்த மூன்றரை சவரன் தங்க ஆரத்தைக் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து நகையை திருடிய மர்ம் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை