உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

குறிஞ்சிப்பாடி; மதுபாட்டில் விற்ற பெண்களை போலீசார் கைது செய்தனர் குறிஞ்சிப்பாடி போலீஸ் எஸ்.ஐ., ஜெயதேவி தலைமையிலான போலீசார், நேற்று பிற்பகல் குறிஞ்சிப்பாடி, அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்களிடம் போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றது தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வி, 67; சேராக்குப்பம், எம்.கே.கே நகரை சேர்ந்த அமலா , 51; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 13 புதுச்சேரி மதுபாட்டில்கள், டி.வி.எஸ்., மொபெட் மற்றும், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை