உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

கடலுார் : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து இந்திய மாதர் தேசிய சமேளனம் சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்தும், பாலியல் வழக்குகளை உடன் விசாரித்து நீதி வழங்க வேண்டும்.தனியார், சிறு, குறு தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சமேளனம் மாவட்ட குழு சார்பில் நேற்று கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அம்பிகா, மல்லிகா, வளர்மதி, வாசுகி, இளந்தென்றல், ஸ்டெல்லாகிரேசி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டியு.சி., குளோப், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாதர் சங்க நிர்வாகிகள் பரிமளா, லட்சுமி, குமாரி, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி