உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா 

கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா 

கடலுார்: வீட்டை காலி செய்யு மாறு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பார்வதி. இவர், தனது குடும்பத்துடன் கடலுார் கலெக்டர் அலு வலகத்தில் நேற்று மாலை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், எனக்கு சொந்த மாக வீடு உள்ள இடத்தில் பஞ்சாயத்து கட்டடம் கட்ட வேண்டுமெனக் கூறி சிலர் வீட்டை காலி செய்யுமாறு கூறுகின்றனர். இல்லையெனில் வீட்டை இடித்து பட்டாவை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர்.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கோரிக்கை மனு அளித்து விட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை