உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி தீவிரம்

 மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி தீவிரம்

மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணிகளை அதிகாரிகள்தீவிரம் காட்டி வருகின்றனர். தி.மு.க.,தேர்தல் வாக்குறுதியின் படி மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தில் ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல பெண்களுக்கு தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று பொதுமக்களிடம் அதிருப்தி இருந்து வந்தது. மேலும் விண்ணப்பம் அளிக்காத மகளிர் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாவட்டம் தோறும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மகளிர் உரிமை தொகை குறித்து விண்ணப்பங்கள் அதிகளவில் பெறப்பட்டு உள்ளன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீவிரமாக பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முகாமில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மகளிர் உரிமை தொகை விரைவாக பெண்களுக்கு கிடைக்கவும், தேர்தலில் பெண்களின் ஒட்டுகளை எளிதாக பெறவும், அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒட்டுக்களை பெறவும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி