உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புதிய சுகாதார நிலைய பணிகள் துவக்கம்

 புதிய சுகாதார நிலைய பணிகள் துவக்கம்

நெய்வேலி: நெய்வேலி அடுத்துள்ள கீழ்மாம்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் மாவட்ட கனிமவள நிதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் அமைக்கும் கட்டுமான பணி துவங்கியது. இந்த பணியை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன், டாக்டர் அறிவொளி, எஸ்.டி.ஓ., சபிதா, பொறியாளர் மவுஷிகா, ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், ராஜ்குமார், உத்தரகுமாரன், கண்ணப்பன், கலையரசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை