உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீழே விழுந்து தொழிலாளி பலி

கீழே விழுந்து தொழிலாளி பலி

குறிஞ்சிப்பாடி; வடலுார் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 45; கன்வேயர் பெல்ட் பிட்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த 9ம் தேதி தனது மாமனார் வீடான குறிஞ்சிப்பாடி அடுத்த கள்ளையங்குப்பத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வீடு திரும்பினார். குறிஞ்சிப்பாடி, அண்ணா நகர் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே நாய் திடீரென வந்ததால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ