உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பண்ருட்டி: பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.கடலுார் அடுத்த பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 42; சென்ட்ரிங் தொழிலாளி. இவர், நேற்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.பிற்பகல் 2:45 மணியளவில் கம்பி அறுக்கும் மிஷினில் கம்பி அறுத்த போது பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் இறந்தார்.பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை