உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

புவனகிரி: புவனகிரி தாலுகா, பூவாலையை சேர்ந்த வர் மாயகிருஷ்ணன், விவசாயி. இவருக்கு பி.உடையூரில் சொந்தமான வயல் உள்ளது. இந்த வயலிலுள்ள மின் கம்பத்தில், மேற்குவங்கம், சக்கர்மா பகுதியைச் சேர்ந்த யாசின்,20; என்பவர் கடந்த மாதம் 27ம் தேதி மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். உடனே அவரை சென் னையில் தனியார் மருத்துவமனைக்குதீவிரசிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மருதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை