உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பண்ருட்டி: மூட்டு வலியால் அவதியடைந்தவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன்,48; தொழிலாளி. இவருக்கு கடந்த 15 ஆண்டிற்கு முன் ஏற்பட்ட விபத்தால் மூட்டு வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். நேற்று (நவ.,15) இரவு, வலி அதிகமானது. அதில் விரக்தியடைந்த லோகநாதன், களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் இன்று (நவ.,16) மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை