மேலும் செய்திகள்
புரட்டாசி பவுர்ணமி கோவில்களில் வழிபாடு
07-Oct-2025
விருத்தாசலம்: கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை மற்றும் 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணியளவில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. இதில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
07-Oct-2025