உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணை

புவனகிரி; புவனகிரியில், இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கும்பகோணம் அருகே திருவிடை மருதுார் அம்மாசத்திரத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி பிரியங்கா, 25; இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில், கோபித்துக்கொண்டு தாய்வீடான புவனகிரிக்கு பிரியங்கா வந்தார். கடந்த ஒற்றரை மாதங்களாக தங்கியிருந்தவரை நேற்று காலை முதல் காணவில்லை.இது குறித்து பிரியங்காவின் தாய் மஞ்சுளா கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ