உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் தாக்கு வாலிபர் கைது

முதியவர் தாக்கு வாலிபர் கைது

புவனகிரி; புவனகிரி அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அருகே பூ.மணவெளியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 66; இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சீத்தாராமன் மகன் சிலம்பரசன், 28; என்பவர், போதையில் பாட்டில்களை உடைத்து, முதியவரிடம் தகராறு செய்து தாக்கினார்.இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து சிலம்பரசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை