உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது

வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது

திட்டக்குடி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொ.செங்கமேட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி குணசுந்தரி, 26; இவர், நேற்று பகல் 11:30 மணியளவில் குணசுந்தரி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறிக்க முயன்றார். இதையறிந்து குணசுந்தரி கூச்சலிட அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்மநபரை துரத்தி பிடித்து ஆவினங்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஆவினங்குடி, மாரியம்மன் கோவில் தெரு ராஜேந்திரன் மகன் அழகுதுரை, 23, என்பதும், இவர் மீது போக்சோ, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து குணசுந்தரி கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து அழகுதுரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி