நாட்டு வெடி தயாரித்த வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவில்: அரசு உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் ஆத்தங்கரை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமார், 30; இவர், குருங்குடியில் அம்மன் என்ற பெயரில் அரசு உரிமம் பெற்று பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர், உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, குமாரை கைது செய்து, நாட்டு பட்டாசு 10 கட்டு, மின்னல் வெடி 10 சரம், குண்டுவெடி 10 சரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.