மேலும் செய்திகள்
7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
29-Dec-2024
கடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் டைமன்துரை மற்றும் போலீசார் நேற்று காலை, வெங்கடாம்பேட்டைபகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதை போலீசார் கண்டறிந்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து கடை உரிமையாளர் சுரேஷ்குமார்,30, என்பவரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.
29-Dec-2024