உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கத்தியுடன் அலப்பறை வீடியோ கைப்புள்ள வாலிபர் கைது

கத்தியுடன் அலப்பறை வீடியோ கைப்புள்ள வாலிபர் கைது

ராமநத்தம்: ராமநத்தம் அருகே இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் அலப்பறை செய்து வீடியோ வெளியிட்ட 'கைப்புள்ள' வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராமநத்தம் அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக், 22; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த 27ம் தேதி இரவு ஆலம்பாடியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு கத்தியுடன் வந்த தீபக் தனது நண்பர்களுடன் சேர்ந்து 'இங்க எப்பவுமே நாங்கதான்' என வெட்டுவது மற்றும் குத்துவது போல் பாவனை செய்து வீடியோ எடுத்துள்ளார். அதனைத அவரது நண் பர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன் வீடியோ வைரலானது. இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, வீடியோவில் கத்தியுடன் அலப்பறை செய்த தீபக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை