உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூலி தகராறில் வாலிபர் கொலை குள்ளஞ்சாவடி போலீசில் தொழிலாளி சரண்

கூலி தகராறில் வாலிபர் கொலை குள்ளஞ்சாவடி போலீசில் தொழிலாளி சரண்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கூலித்தராறில் சப் கான்ட்ராக்டர் மகனை அடித்து கொலை செய்த தொழிலாளி போலீசில் சரணடைந்தார்.கடலுார் மாவட்டம், தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஏழுமலை,23; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சிப்காட் பகுதியில் குடிநீர் பைப் புதைக்கும் பணியை தனது தந்தை பெயரில் சப் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். .இவர், மூன்று தொழிலாளர்களை பணியில் அமர்த்தி அவர்களுடன் சக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்கள் 4 பேரும் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை கூட்ரோட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கியிருந்த அறையின் மொட்டை மாடியில் ஏழுமலை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் நேற்று காலை ஏழுமலை உடைலை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஏழுமலையை அடித்து கொலை செய்ததாக, கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, சுப்புராய கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் அன்பரசன்,18; குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை 9:00 மணியளவில் சரணடைந்தார்.விசாரணையில், நேற்று முன்தினம் இரவு, ஏழுமலை மற்றும் உடன் தங்கியிருந்த சக தொழிலாளர் ஒருவரின் பிறந்த நாள் விழாவிற்காக கேக் வெட்டி, மது அருந்தியுள்ளனர்.அப்போது வேலை செய்ததற்கான கூலி பாக்கி வைத்துள்ளததை ஏழுமலையிடம், அன்பரசன் கேட்டதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அன்பரசன் இரும்பு பைப்பால் ஏழுமலையின் தலையில் தாக்கினார். அதில், ஏழுமலை மயங்கி விழுந்ததும் அன்பரசன், சக தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு, மீண்டும் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது ஏழுமலை இறந்திருப்பது தெரியவந்தது. உடன், பயத்தில் சொந்த ஊருக்கு சென்றவர் காலையில் போலீசில் சரணடைந்தது தெரிய வந்தது.அதன்பேரில், சரணடைந்த அன்பரசனை, அழைத்து வர வெள்ளி மேடுபேட்டை போலீசார், குள்ளஞ்சாவடிக்கு சென்றுள்ளனர். அன்பரசனை விசாரித்தால்தான், கொலையில், வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி