வாலிபர் பலி
கடலுார்: பஸ்நிலையம் அருகே தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் சங்கர்,28; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் டாஸ்மாக் கடை அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அதில் சங்கர் அதே இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.