உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். நடுவீரப்பட்டு அடுத்த அசரடிக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30; விவசாயி. இவரது மனைவி பிரீத்தி. வெங்டேஷ்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால், மின்விசிறியில் துாக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் வெங்கடேசை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !