உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுகிணறு வெட்டுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுகிணறு வெட்டுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுகிணறு வெட்டுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் பாப்பிரெட்டிப்பட்டி,:பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் கிணறுகள் வெட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கடத்தூர், பொம்மிடி பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதிகளாகும். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். போதிய தண்ணீர் வசதி இல்லாததால், சில விவசாயிகள் சோளம், கொத்து மல்லி, மரவள்ளி கிழங்கு, பருத்தி, கொண்டைக் கடலை பயிர் சாகுபடி செய்கின்றனர். பல விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல், திருப்பூர், கோவை, பெங்களூர் என கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். ஆனால் கடந்த மாதம் பெய்த மழையால் நீர்நிலைகள் குளம், குட்டை, ஏரிகளில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்ற சில விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் புதிய கிணறுகள் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து வேப்பிலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி போத்துராஜ்,35, கூறியதாவது;பொம்மிடி அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் கொண்டைகடலை, கொத்து மல்லி பயிர் சாகுபடி செய்துள்ளேன். போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் ஏற்கனவே நிலத்தில் ஆழ்துளை கிணறு, 1,200 அடி ஆழத்தில் போட்டுள்ளேன். இருந்தபோதிலும் தண்ணீர் போதுமான அளவு கிடைக்கவில்லை. தற்போது மழை பெய்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, 16க்கு 16 என்ற அளவிற்கு, கடந்த, 10 நாட்களாக விவசாய நிலத்தில் புதிய கிணறு வெட்டி வருகிறேன். இதில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் கிடைத்து உள்ளது. தற்பொழுது, 45 அடி வெட்டி உள்ளேன். இன்னும், 20 அடி ஆழம் வெட்டினால் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும். புதிய கிணறு வெட்ட வேளாண்மை துறை சார்பில் உதவித்தொகை அளித்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ