உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்பாலக்கோடு :பாலக்கோடு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவையை டி.ஆர்.ஓ., கவிதா நேற்று தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில், 2024 -- 2025 ஆண்டு அரவை பருவத்தில், 3,025 ஏக்கர் பரப்பில், விவசாயிகள் கரும்பு அறுவடைக்கு பதிவு செய்திருந்தனர். விவசாயிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, கரும்பு அரவையை டி.ஆர்.ஓ., கவிதா நேற்று தொடங்கி வைத்தார். நடப்பு ஆண்டில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை, கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், செயலாட்சியர் ரவி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி, விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி, சர்க்கரை ஆலை பணியாளர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ