உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவா

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவா

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவாதம் பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், த.வெ.க., பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில், நகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் மகளிர் தின விழாவையொட்டி மாவட்ட மகளிரணி செயலாளர் திலகவதி, கீர்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது. பேரணி பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தொடங்கியது. அப்போது பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை எனக்கூறி பேரணியை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் முன், த.வெ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் போலீசார் அனுமதி அளித்தனர்.அங்கிருந்து பொம்மிடி- - சேலம் ரோட்டில் பேரணியாக சென்று, தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச சேலை, உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், அனுமதியின்றி பேரணியாக சென்றதாக, பொ.மல்லாபுரம் வி.ஏ.ஓ., சாமிநாதன் புகார் படி, தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயகாந்த், நிர்வாகிகள் கார்த்திக், செல்வம், 4 பெண்கள் உள்ளிட்ட, 17 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை