உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

மழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையின் போது, இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் லில்லி தலைமை வகித்து பேசியதாவது:வடக்கிழக்கு பருவமழை காலத்தில், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் அறிந்து நடவடிக்கை எடுக்க வசதியாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு, கட்டணம் இல்லாத டெலிஃபோன் (1077) வசதி செய்யப்படும். இதே போல் கோட்ட, வட்ட அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அலுவலர்கள் மழை பாதிப்பு விபரங்களை பதிவு செய்ய இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்களுக்கு மழை வெள்ளத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து தீயணைப்பு துறை மூலம் மாதிரி செயல் விளக்கங்கள் ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஓடை, வாய்க்கால், பாலங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன் கூட்டியே பார்வையிட்டு அகற்றிட வேண்டும். பொது மக்கள் மற்றும் கால்நடைகள் நோயில் இருந்து காக்க தேவையான உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவுக்கு அரசு மருத்துவமனையில் இருப்பு வைக்கப்படும். கிராம அளவில் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்கள் மழைகாலங்களில் விழிப்புடன் இருந்து மழை பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார். டி.ஆர்.ஓ., கணேஷ், சார் ஆட்சியர் மரியம் சாதிக், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜு, கூட்டுறவு இணைப்பாதிவாளர் மணிமாறன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், துணை ஆட்சியர் மோகன்ராஜ், பாலசுப்பிரமணியம், நகராட்சி கமிஷனர் அண்ணாதுறை, பொறியாளர் ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ