பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தாததை கண்டித்து தீர்மானம்
பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தாததை கண்டித்து தீர்மானம்பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ரயில் பயனாளர்கள் சங்க கூட்டம், கவுரவ தலைவர் அன்பின் ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார மக்கள், பல ஆண்டுகளாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் முதுநிலை வணிக மேலாளர் ஆகியோரிடம் கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களை, பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், இங்கு நிறுத்த இயலாது. பதிலாக சேலம், மொரப்பூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களை பயன்படுத்தி கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வரும் பழமையான பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த மறுப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கப்பட்டது.வரும் மார்ச், 7ல் அம்ரித் பாரத் திட்டத்தில், புதுப்பிக்கப்பட்ட பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் திறப்பு விழாவை நடக்கிறது. இதை பொம்மிடி பகுதி மக்கள் புறக்கணித்து, அன்று வணிகர் சங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முழு கடை அடைப்பு நடத்துவது, ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயில் முன்பு கண்டன முழக்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தலைவர் ஆசாம் கான், செயலாளர் ஜெயசிங், பொருளாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் சிவக்குமார், துணை செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.