மேலும் செய்திகள்
பி.எஸ்.என்.எல்., 'சிக்னல்' பிரச்னை
14-Feb-2025
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை ஜப்திசெய்ய முயன்ற நகராட்சி நிர்வாகத்தினர்தர்மபுரி:சொத்துவரி செலுத்தாத, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை நகராட்சி பணியாளர்கள் ஜப்தி செய்ய முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி நகராட்சியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக, வர்த்தக நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், மாநில, மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து குடிநீர், சொத்து வரி உள்ளிட்டவைகளை வசூல் செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம், நகராட்சி பூங்கா அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் பாரதிபுரத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் உட்பட மூன்று அலுவலங்களுக்கும் சேர்த்து, 35 லட்சம் ரூபாய் சொத்து வரியை பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தினர் செலுத்தாமல் இருந்துள்ளனர். இது குறித்து, நகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை, பி.எஸ்.என்.எல்., அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, தர்மபுரி நகராட்சி பணியாளர்கள் சொத்து வரியை வசூல் செய்ய, பாரதிபுரம் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் சென்றனர். அப்போது, வரி வசூலுக்காக அலுவலகம் ஜப்தி செய்யப்படுகிறது என தெரிவித்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினர். அப்போது, பி.எஸ்.என்.எல்., அலுவலக கேட்டின் முன் நகராட்சி வாகனங்களை நிறுத்தினர். இதுகுறித்து, நகராட்சி பணியாளர்கள், தர்மபுரி போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் வரும், 24க்குள், பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களுக்கான சொத்து வரியை செலுத்த வேண்டும். வரியை செலுத்த தவறினால் வரும், 26ல் பி.எஸ்.என்.எல்., அலுவலக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து, நகராட்சி பணியாளர்கள் அங்கிருந்து சென்றனர்.
14-Feb-2025